கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்

கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்

Update: 2021-08-07 16:15 GMT
உடுமலை, ஆக.8-
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது. இதைத்தொடர்ந்து அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்படி உடுமலைநகராட்சி பகுதியில் நகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறது. 
அத்துடன் அரசு அலுவலக கட்டிடங்கள், தனியார் அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் சாலைகளின் இருபுறம் ஆகிய இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் தொட்டியில் கிருமி நாசினி நிரப்பப்பட்டு அதை வாகனத்தில்வைத்து வீதி வீதியாக சென்று தெளிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்