பெண்களுக்கு எதிராக குற்றம் புரிபவர்கள் தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும்; பா.ஜ.க. மகளிர் அணி தீர்மானம்

தமிழக பா.ஜ.க. மகளிர் அணி மாநில செயற்குழு கூட்டம், மாநில மகளிர் அணி தலைவி மீனாட்சி தலைமையில் நடந்தது. தேசிய மகளிர் அணி பொதுச் செயலாளர் சுப்ரீத் கவுர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

Update: 2021-08-07 09:40 GMT
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* இந்தியாவில் 48 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் அளிக்கப்பட்டிருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

* தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை என்றாலே பொய்களின் குவியல் என்பது அனைவரும் அறிந்தது. இல்லத்தரசிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று பிரசாரம் செய்துவிட்டு, இதுவரை ஆயிரம் ரூபாய் 
வழங்கப்படவில்லை.

* தமிழகத்தில் மது ஒழிப்பு தேர்தல் வாக்குறுதியாக மட்டும் இல்லாமல் உண்மையில் மது ஒழிப்பின் சாத்தியக்கூறுகளை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்.

* பாரத மாதாவை இழிவுபடுத்திய கன்னியாகுமரி மாவட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதோடு, சுதந்திர தினத்தன்று பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் 75 ஆயிரம் வீடுகளில் பாரத மாதாவின் உருவப்படம் வைத்து பூஜை செய்ய உறுதி கொள்கிறோம்.

* பெண்களுக்கு எதிராக கொடூர குற்றம் புரிபவர்கள் தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்