போலீஸ் உடற்தகுதி தேர்வில் சிவகிரியை சேர்ந்த திருநங்கை தேர்ச்சி

போலீஸ் உடற்தகுதி தேர்வில் சிவகிரியை சேர்ந்த திருநங்கை தேர்ச்சி அசத்தி உள்ளார்.;

Update:2021-08-07 05:03 IST
சிவகிரி:
சிவகிரி நகரப்பஞ்சாயத்து 7-வது வார்டு விஸ்வநாதபேரி கிராமத்தை சேர்ந்தவர் திருநங்கை தீபிகா (வயது 25). இவரது பெற்றோர் இருளப்பன்-முத்துலட்சுமி. 11-ம் வகுப்பு படித்தபோது பாதியில் படிப்பை நிறுத்திய தீபிகா தற்போது தமிழக அரசால் நடத்தப்பட்ட போலீஸ் எழுத்து தேர்வில் வெற்றி பெற்றார். மேலும் சென்னையில் நடந்த உடற்தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்று, அவரது சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து வருகிற 9-ந்தேதி அவருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற உள்ளது. தீபிகாவுக்கு சொந்த ஊர் சிவகிரி என்றாலும் கடந்த 3 ஆண்டுகளாக சென்னையில் போலீஸ் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்