களக்காடு மலையில் திடீர் தீ
களக்காடு மலையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.;
களக்காடு:
களக்காடு அருகே கள்ளிகுளம் மங்கம்மாள் சாலையில் பிரண்ட மலை உள்ளது. இங்கு முயல், உடும்பு, எறும்புத்தின்னி உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. மேலும் கரடிகளும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பிரண்ட மலையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென பரவியது. இதுபற்றி தகவல் அறிந்ததும் சேரன்மாதேவி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த மலையில் ஏற்கனவே கடந்த வாரம் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தற்ேபாது மீண்டும் தீப்பிடித்து உள்ளது. அந்த மலைப்பகுதியில் மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு சென்று இருக்கலாம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.