சத்தியமங்கலத்தில் கனகாம்பரம் கிலோ ரூ.670-க்கு ஏலம்
சத்தியமங்கலத்தில் கனகாம்பரம் கிலோ ரூ.670-க்கு ஏலம் போனது.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும்.
நேற்று நடந்த ஏலத்தில் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து விவசாயிகள் 5 டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள்.
இந்த ஏலத்தில் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.455-க்கும், முல்லை ரூ.172-க்கும், காக்கடா ரூ.150-க்கும், செண்டு மல்லி ரூ.93-க்கும், பட்டு பூ ரூ.145-க்கும், ஜாதிமல்லி ரூ.400-க்கும், கனகாம்பரம் ரூ.670-க்கும், சம்பங்கி ரூ.120-க்கும், அரளி ரூ.100-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.160-க்கும் என ஏலம் போனது.