தாளவாடி அருகே ரோட்டோரத்தில் வீசப்பட்டிருந்த 1,000 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

தாளவாடி அருகே ரோட்டோரத்தில் வீசப்பட்டிருந்த 1,000 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-08-06 21:41 GMT
தாளவாடி
தாளவாடி அடுத்த நெய்தாளபுரம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தாளவாடி வட்ட வழங்கல் அலுவலர் செல்வம் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர் தர்மராஜுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் அங்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ரோட்டோரத்தில் 18 மூட்டைகள் சிதறி கிடந்ததை பார்த்தனர். அவற்றை பிரித்தபோது அதில் சுமார் 1,000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டதை அறிந்த ரேஷன்அரிசி கடத்தல் கும்பல் அவற்றை ரோட்டோரத்தில் வீசிவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் தாளவாடி தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

மேலும் செய்திகள்