சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை சேலம் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2021-08-06 20:42 GMT
சேலம்
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள மல்லிகுந்தம் பகுதியை சேர்ந்தவர் அங்கமுத்து (வயது 21). இவர், கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மேட்டூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த அங்கமுத்துவுக்கு 10 ஆண்டுகள் சிறையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முருகானந்தம் தீர்ப்பளித்தார்.

மேலும் செய்திகள்