குளச்சல் மீனவர்கள் வலையில் கணவாய் மீன்கள் சிக்கின

குளச்சலில் மீன்பிடி தடைகாலம் முடிந்த பின்பு மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள் வலையில் ஏராளமான கணவாய் மீன்கள் சிக்கின.

Update: 2021-08-06 20:27 GMT
குளச்சல்:
குளச்சலில் மீன்பிடி தடைகாலம் முடிந்த பின்பு மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள் வலையில் ஏராளமான கணவாய் மீன்கள் சிக்கின.
மீன்பிடி தடைகாலம்
குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றன. விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று 10 நாட்கள் வரை தங்கி இருந்து மீன் பிடித்து வருவது வழக்கம்.  
இந்தநிலையில், மேற்கு கடற்கரை பகுதியில் கடந்த ஜூன் 1-ந்் தேதி தொடங்கி ஜூலை 31-ந் தேதி நள்ளிரவு வரை விசைப்படகுகள் மீன்பிடிக்க தடைக்காலம் அமல் படுத்தப்பட்டது. தடைக்காலம் முடிந்த பின்பு கடந்த 1-ந் தேதி முதல் மீண்டும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். 
கணவாய் மீன்கள் சிக்கின
குளச்சல் கடல் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகளில் 20 விசைப்படகு மீனவர்கள் நேற்று கரை திரும்பினர். இந்த மீனவர்கள் வலையில் கணவாய் மற்றும் நாக்கண்டம் மீன்கள் ஓரளவு சிக்கி இருந்தன. அவற்றை மீனவர்கள் துறைமுக ஏலக்கூடத்துக்கு எடுத்து சென்று குவித்து வைத்து விற்பனை செய்தனர். 
கணவாய் மீன்கள் கிலோ ரூ.300-ம், நாக்கண்டம் மீன்கள் கிலோ ரூ.35-க்கும் விலை போனது. வியாபாரிகள் இந்த மீன்களை   போட்டிப்போட்டு ஏலம் எடுத்தனர். கணவாய் மீன்களை உணவுக்காகவும், நாக்கண்டம் மீன்களை பற்பசை தயாரிப்பு நிறுவனங்களுக்காகவும் வாங்கி சென்றனர். கடந்த 2 மாதங்களுக்கு பின்பு விசைப்படகு மீன்பிடி சீசன் தொடங்கி உள்ளதால்  ேநற்று   குளச்சல் மீன்பிடி துறைமுகம் களைகட்டியது. 

மேலும் செய்திகள்