நிழலுக்காக லாரிக்கு அடியில் அமர்ந்திருந்த தொழிலாளி பலி

நிழலுக்காக லாரிக்கு அடியில் அமர்ந்திருந்த தொழிலாளி பலியானார்.

Update: 2021-08-06 19:24 GMT
காரியாபட்டி, ஆக.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே மேல காஞ்சிரங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 60). இவர் 100 நாள் திட்ட வேலைக்குச் சென்றுவிட்டு டி.செட்டிக்குளம் விலக்கு அருகே நின்ற லாரிக்கு அடியில் நிழலுக்காக அமர்ந்திருந்தார். 
இதனை கவனிக்காமல் லாரியை டிரைவர் நகர்த்தி விட்டார். இதில் பொன்னுச்சாமி லாரிக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இந்த விபத்து குறித்து காரியாபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்