பட்டாசு ஆலை தொழிலாளி தற்கொலை
பட்டாசு ஆலை தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
சிவகாசி,ஆக
சிவகாசி மீனம்பட்டி வடக்கு தெருவில் வசித்து வந்தவர் குருசாமி (வயது 58). இவருக்கு விஜயா என்ற மனைவியும் 3 பிள்ளைகளும் உள்ளனர். 3 பேரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் குருசாமி மற்றும் அவரது மனைவி விஜயா இருவரும் வேலை செய்து வந்தனர். விஜயாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் குருசாமி வீட்டில் யாரும் இல்லாத போது சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.