பிளஸ்-2 துணைத்தேர்வை தனித்தேர்வர்கள் 112 பேர் எழுதினர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 துணைத்தேர்வை தனித்தேர்வர்கள் 112 பேர் எழுதினர்.
புதுக்கோட்டை, ஆக.7-
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 துணைத்தேர்வை தனித்தேர்வர்கள் 112 பேர் எழுதினர்.
துணைத்தேர்வு
தமிழகத்தில் பிளஸ்-2 துணைத்தேர்வு நேற்று தொடங்கியது. இத்தேர்வு புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை எஸ்.எப்.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அறந்தாங்கியில் ஐடியல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 மையங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்வை எழுத தனித்தேர்வர்கள் மொத்தம் 1,336 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ் பாடத்தேர்வு நேற்று நடைபெற்றது. தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கியது. முன்னதாக தேர்வர்களின் உடல் வெப்ப நிலை தெர்மல் ஸ்கேனர் கருவி கொண்டு பரிசோதனை செய்யப்பட்டன. மேலும் கைகளை கழுவ கிருமி நாசினி வழங்கப்பட்டன. சமூக இடைவெளியை கடைப்பிடித்து தேர்வர்கள் அமர வைக்கப்பட்டனர். ஒரு பெஞ்சில் 2 பேர் அமர்ந்து தேர்வு எழுதினர். தேர்வர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து தேர்வுக்கு வந்திருந்தனர்.
முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு
புதுக்கோட்டை எஸ்.எப்.எஸ். பள்ளியில் தேர்வு நடைபெற்றதை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விஜயலட்சுமி ஆய்வு மேற்கொண்டார். தேர்வு மதியம் 1.15 மணிக்கு முடிவடைந்தது.
மாவட்டத்தில் நேற்று நடந்த தமிழ் பாடத்தேர்வை எழுத மொத்தம் 146 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 112 பேர் தேர்வு எழுதினர். 34 பேர் தேர்வு எழுதவரவில்லை. அடுத்ததாக ஆங்கிலம் பாடத்தேர்வு வருகிற 9-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்வு வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து இத்தேர்வு நடைபெறுகிறது.