புதுப்பேட்டை அருகே 2 குழந்தைகளின் தாய் தற்கொலை

புதுப்பேட்டை அருகே 2 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்டாா்.

Update: 2021-08-06 17:29 GMT
புதுப்பேட்டை, 

புதுப்பேட்டை அருகே உள்ள அங்குசெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரகு (வயது 34). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சுகந்தி (29). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. 

இந்நிலையில் நேற்று வீட்டில் த னியாக இருந்த  சுகந்தி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த  புதுப்பேட்டை போலீசார்  விரைந்து வந்து, சுகந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து,  சுகந்தியின் சாவுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்