கள்ளக்குறிச்சியில் நடந்த கற்பழிப்பு வழக்கில் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தொழிலாளி கைது
கள்ளக்குறிச்சியில் நடந்த கற்பழிப்பு வழக்கில் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தொழிலாளி கைது
கள்ளக்குறிச்சி
கடந்த 15-9-2005 அன்று கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் தனியார் பள்ளி முன்பு நின்று கொண்டிருந்த பெண்ணை கற்பழித்தது தொடர்பாக பெருவங்கூர் காலனி பகுதியை சேர்ந்த வேலுச்சாமி(வயது 45) உள்பட 3 பேர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கு விழுப்புரம் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஜாமீனில் வெளியே வந்த வேலுச்சாமி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் திடீரென தலைமறைவானார். அவரை கைது செய்ய விழுப்புரம் மகிளா நீதிமன்றம் பிடி வாரண்டு பிறப்பித்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி போலீசார் வேலுசாமியை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் வேலுசாமி சென்னையில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் தலைமையிலான போலீசார் சென்னைக்கு விரைந்து சென்று கடந்த 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வேலுச்சாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.