இறைச்சி விற்க முயன்ற 2 பேர் கைது
காட்டுப்பன்றி இறைச்சி விற்க முயன்ற 2 பேர் கைது
சேவூர்
சேவூர் அருகே ஆலத்தூர் கிராமம் தொட்டிபாளையத்தில் காட்டுப் பன்றி இறைச்சி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சேவூர் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர்கள் அன்பரசு, சர்வேஸ்வரன், தனிப்பிரிவு போலீஸ் வெள்ளியங்கிரி உள்ளிட்ட போலீசார் தொட்டிபாளையம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, தோட்டத்து பகுதியில் உள்ள பள்ளத்தில் அதே பகுதியை சேர்ந்த சுதாகர்வயது 35, சரவணன்25 காட்டு பன்றி இறைச்சியை விற்பனை செய்ய முயன்றனர்.இதை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார், காட்டுப்பன்றி விற்பனை செய்ய முயற்சித்த சுதாகர், சரவணன் ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடமிருந்த காட்டுப்பன்றிகள் இறைச்சி 60 கிலோவையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் சிறுமுகை வன சரகர்கள் கணேசன், திருமூர்த்தி ஆகியோரிடம் கைது செய்யப்பட்ட சுதாகர், சரவணன் இருவரையும் ஒப்படைத்தனர்.