உளுந்தூர்பேட்டை அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

உளுந்தூர்பேட்டை அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது ஏற்கனவே திருமணம் ஆனவர்

Update: 2021-08-06 17:14 GMT
உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு(வயது 27). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். 

இந்த நிலையில் 17 வயது சிறுமிக்கு சுரேஷ்பாபு காதல் வலை வீசி உள்ளார். பின்னர் அவர் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதனால் தற்போது அந்த சிறுமி 7 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதுபற்றி அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் சுரேஷ்பாபுவை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்