போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

குலசேகரன்பட்டினத்தில் வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Update: 2021-08-06 17:11 GMT
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். இதுகுறித்த புகாரின் பேரில், குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சாத்தான்குளம் அண்ணாநகரை சேர்ந்த கந்தசாமி மகன் மாணிக்கம் (வயது 22) என்பவர் குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு வந்த போது அந்த சிறுமியை பார்த்து காதலிப்பதாக கூறியுள்ளார். இந்நிலையில் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், மாணிக்கத்தை பிடித்து, போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்