தூத்துக்குடியில் 18 பேருக்கு கொரோனா

தூத்துக்குடியில் 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-08-06 17:08 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 55 ஆயிரத்து 197 ஆக உள்ளது. நேற்று 20 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவில் இருந்து 54 ஆயிரத்து 594 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் 205 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மேலும் ஒருவர் கொரோனாவால் இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 398 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்