ஊட்டச்சத்து உணவுகள் குறித்த கண்காட்சி
ஊட்டச்சத்து உணவுகள் குறித்த கண்காட்சி.
ஊட்டி,
உலக தாய்ப்பால் வாரம் கடந்த 1-ந் தேதி முதல் இன்று (சனிக்கிழமை) வரை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள் ஊட்டச்சத்து உணவுகளை சமைத்து குன்னூர் அருகே கேத்தொரை கிராமத்தில் நேற்று கண்காட்சிக்காக வைத்தனர்.
உணவு தானியங்கள், பச்சை காய்கறிகள் வைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து வளரிளம் பெண்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஊட்டசத்து உணவுகளை உட்கொள்வதால் நோயில் இருந்து தப்பிக்கலாம் என்று அறிவுரை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி அலுவலர் பூங்கொடி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.