போச்சம்பள்ளி அருகே துணிகரம் பாலீஷ் போடுவதாக கூறி பெண்ணிடம் நகை திருட முயன்ற 2 பேர் கைது பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

போச்சம்பள்ளி அருகே பாலீஷ் போடுவதாக கூறி பெண்ணிடம் நகை திருட முயன்ற 2 பேரை பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-08-06 16:19 GMT
மத்தூர்:
போச்சம்பள்ளி அருகே பாலீஷ் போடுவதாக கூறி பெண்ணிடம் நகை திருட முயன்ற 2 பேரை பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மூதாட்டி
போச்சம்பள்ளி அருகே புளியம்பட்டியை சேர்ந்தவர் முருகம்மாள் (வயது72), இவர் திருவயலூர் பகுதியில் நிலத்தில் வேலை செய்து கொண்டு இருந்தார். அங்கு வந்த 2 பேர், நகைக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறினர். இதை நம்பிய முருகம்மாள் தான் அணிந்து இருந்த 2 பவுன் தங்க சங்கிலியை கழற்றி அவர்களிடம் கொடுத்தார்.
அவர்களும் நகையை பாலீஷ் செய்வதாக கூறி ஒரு திரவத்துக்குள் போட்டனர். சிறிது நேரம் கழித்து அதனை எடுத்து முருகம்மாளிடம் கொடுத்தனர். அதன் நிறம் மாறி இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த முருகம்மாள், அய்யோ என்னுடைய நகை இப்படி ஆகி விட்டதே என்று அலறினார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு திரண்டனர்.
2 பேர் கைது
அவர்கள், நகை பாலீஷ் போடுவதாக கூறிய 2 பேரை பிடித்து போச்சம்பள்ளி போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரகுநாத் தாஸ் (37), முகமது நூர் (36) ஆகியோர் என்பதும், அவர்கள் நூதன முறையில் நகை திருட வந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்