மது, புகையிலை விற்ற 2 பேர் கைது
சிவகாசி பகுதியில் மது, புகையிலை விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி எம்.புதுப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் குமிழங்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்ேபாது அங்கு மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்த சுப்புராம் (வயது 60) என்பவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 16 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதே போல் திருத்தங்கல் போலீசார் சுக்கிரவார்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்குள்ள கடையின் பின்புறம் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்து ராஜகோபால் (41) என்பவரை கைது செய்தனர்.