தென்காசியில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

தென்காசியில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.

Update: 2021-08-05 20:25 GMT
தென்காசி:
தென்காசி அருகே அய்யாபுரத்தைச் சேர்ந்தவர் சங்கிலி (வயது 55). விவசாய கூலி தொழிலாளியான இவர் நேற்று மாலை தென்காசி அருகே குத்துக்கல்வலசையில் உள்ள முருகேசனுக்கு சொந்தமான வயலில் வேலை செய்தார். அப்போது வயலில் அறுந்து கிடந்த உயரழுத்த மின்கம்பியை சங்கிலி கையால் எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதில் அவர் மீது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்