விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-08-05 20:24 GMT
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கூடலூர் கிராமத்தை சேர்ந்த தேவேந்திரனின் மகன் ராகுல்(வயது 22). விவசாயம் பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராகுல், தொழில் செய்வதற்காக டிராக்டர் வாங்கித்தருமாறு பெற்றோரிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் குடிப்பழக்கத்தை விடுமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ராகுல், சம்பவத்தன்று வயலுக்கு அடிக்க வைத்திருந்த களைக்கொல்லி பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து குடித்துள்ளார். இதையடுத்து மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தேவேந்திரன் கொடுத்த புகாரின்பேரில் மருவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்