புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் பகுதிகளில் உள்ள 3 கடைகளில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான போலீசார் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது கோரியம்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த கணேசன் (வயது 65), இலையூர் மலங்கன்தெருவைச் சேர்ந்த இளையராஜா (35) ஆகியோர் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர்.