குமரியில் இன்று 78 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம்

குமரி மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) 78 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் நடக்கிறது.

Update: 2021-08-05 20:22 GMT
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) 78 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் நடக்கிறது. 
தடுப்பூசி முகாம்
குமரி மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசி மருந்துகளின் டோஸ்களுக்கு ஏற்ப தினமும் சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று மதுரையில் இருந்து 11,500 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி வந்தது. இதையடுத்து மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) 78 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் நடக்கிறது. 
செண்பகராமன்புதூர், அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம்துறை, குருந்தன்கோடு, கிள்ளியூர், ஆறுதேசம், இடைக்கோடு, குட்டக்குழி, கோதநல்லூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், டதி பள்ளி மற்றும் இந்து கல்லூரி ஆகிய 11 இடங்களிலும் கோவிஷீல்டு தடுப்பூசி ஆன்லைன் டோக்கன் மூலம் போடப்படும். 
நேரடி டோக்கன்
இதே போல பூதப்பாண்டி, கன்னியாகுமரி, குளச்சல், சேனம்விளை, கருங்கல், குழித்துறை, அருமனை, குலசேகரம், பத்மநாபபுரம் ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், குறத்தியறை, தலக்குளம், வீயன்னூர் ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகள், ஆதலவிளை, அளத்தன்கரை, அடைக்காகுழி, ஏந்திகாலை, முட்டைக்காடு ஆகிய அரசு தொடக்கப்பள்ளிகள், தட்டாண்விளை, எறும்புகாடு, மேல ஆசாரிபள்ளம் ஆகிய அரசு நடுநிலைப்பள்ளிகள், செண்பகராமன்புதூர், தடிக்காரன்கோணம், அருமநல்லூர், ஆரல்வாய்மொழி, தோவாளை, அகஸ்தீஸ்வரம், அழகப்பபுரம், கொட்டாரம், மருங்கூர், ராஜாக்கமங்கலம்துறை, சிங்களேயர்புரி, கணபதிபுரம், குருந்தன்கோடு, வெள்ளிச்சந்தை, நடுவூர்கரை, முட்டம், குளச்சல், கிள்ளியூர், கீழ்குளம், நட்டாலம், உண்ணாமலைக்கடை, குழித்துறை, ஆறுதேசம், தூத்தூர், முஞ்சிறை, தேங்காப்பட்டணம், கொல்லங்கோடு, இடைக்கோடு, பத்துக்காணி, மேல்புறம், களியக்காவிளை, பளுகல், குட்டக்குழி, கண்ணணூர், திருவட்டார், பேச்சிப்பாறை, சுருளோடு, கோதநல்லூர், திருவிதாங்கோடு, பள்ளியாடி, ஓலவிளை, பத்மநாபபுரம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் புன்னையடி பள்ளி, இடலாக்குடி பாவலர் மேல்நிலைப்பள்ளி, இந்து கல்லூரி, கவிமணி அரசு பள்ளி ஆகிய இடங்களில் நேரடியாக சென்று டோக்கன் பெற்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
முகாம்களில் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்