மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி
மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலியானார்;
அன்னவாசல்
அன்னவாசல் அருகே உள்ள விளாப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் என்ற கூலான் (வயது 43). இவர் நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் இலுப்பூர்-கீரனூர் சாலையில் லெக்கணாப்பட்டி என்னும் இடத்தில் சென்ற போது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அன்னவாசல் போலீசார் செல்வராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.