மதுரை சிலைமான் அருகே நாட்டார்மங்கலத்தில் கிரானைட் கல் அறுக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் சம்பவத்தன்று கிரானைட் கல் அறுப்பதற்காக எந்திரம் மூலம் ஒரு கல்லை கொண்டு சென்றனர். அப்போது அதை ரிமோட் மூலம் இயக்கும் போது திடீரென்று அந்த கல் பின்னோக்கி வந்ததில் பணியில் இருந்த விஜேந்தர்சிங்(வயது 36) என்பவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து சிலைமான் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.