கல்லூரி மாணவி எரித்துக்கொலை?

திருமங்கலத்தில் வீட்டு குளியல் அறையில் பாதி எரிந்த நிலையில் கல்லூரி மாணவி பிணமாக மீட்கப்பட்டார். அவர் எரித்துக்கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-08-05 19:33 GMT
திருமங்கலம்,

திருமங்கலத்தில் வீட்டு குளியல் அறையில் பாதி எரிந்த நிலையில் கல்லூரி மாணவி பிணமாக மீட்கப்பட்டார். அவர் எரித்துக்கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

 கல்லூரி மாணவி

மதுரை மாவட்டம் திருமங்கலம் மறவன்குளம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகள் கார்த்திகா (வயது 20). இவர் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் இவரது வீட்டின் குளியல் அறையில் இருந்து தீப்பிடித்து கருகிய வாசனை எழுந்தது. அக்கம், பக்கத்தினர் அவரது வீட்டில் உள்ளவர்களிடம் விசாரித்தனர். உடனே வீட்டு குளியல் அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு மாணவி கார்த்திகா உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார்.

எரித்துக்கொலையா?

 இதுகுறித்து தகவல் அறிந்த திருமங்கலம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும் ஆய்வு நடத்தினார்கள். திருமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோதினி, ஆர்.டி.ஓ. அனிதா ஆகியோரும் மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று அங்குள்ளவர்களிடம் விசாரித்தனர்.
கார்த்திகாவின் சாவில் மர்மம் இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். மாணவி தற்கொலைக்கு முயன்றாரா?அல்லது எரித்து கொைல செய்யப்பட்டாரா? என்ற கோணங்களில் திருமங்கலம் டவுன் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்