மோட்டார்சைக்கிள் மோதியது: சைக்கிளில் சென்ற தொழிலாளி பலி

கடத்தூர் அருகே மோட்டார்சைக்கிள் மோதி சைக்கிளில் சென்ற தொழிலாளி பலியானார்.

Update: 2021-08-05 18:43 GMT
கடத்தூர்,

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள சில்லரஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது 45), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள சுங்கர அள்ளி கிராமத்திற்கு சொந்த வேலையாக சென்றுவிட்டு சைக்கிளில் வீடு திரும்பினார். சில்லரஅள்ளி ஏரிக்கரை அருகே வரும்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த மோட்டார் சைக்கிள், சைக்கிள் மீது மோதியது. 

இதில் தூக்கி வீசப்பட்ட செந்தில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் பலியான செந்திலுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். 

மேலும் செய்திகள்