பாப்பிரெட்டிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி கோவில் பூசாரி பலி

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி கோவில் பூசாரி பலியானார்.

Update: 2021-08-05 18:43 GMT
பொம்மிடி,

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அம்மாபாளையத்தை சேர்ந்தவர் பச்சியப்பன் என்ற கரக பூசாரி (வயது 75). இவர் வீட்டில் இருந்து பச்சையம்மன் கோவிலுக்கு நடந்து சென்றார். அப்போது ஆலமரத்தில் இருந்து பள்ளிப்பட்டி நோக்கி செல்வம் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பச்சியப்பன் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கதினர் மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார் விபத்து குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்