அரக்கோணத்தில் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல். 4 பேர் கைது

ஒரு கிலோ கஞ்சா பறிமுதல். 4 பேர் கைது

Update: 2021-08-05 18:12 GMT
அரக்கோணம்

அரக்கோணம் கிருஷ்ணாம்பேட்டை பகுதியில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஓச்சேரி ரோட்டில் நின்றிருந்த 4 பேர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து ஓடினர். அவர்களை துரத்தி சென்று பிடித்து விசாரித்த போது அவர்கள் அரக்கோணம் ஏ.பி.எம். சர்ச் பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் மகன் டேவிட் (வயது 26), கிருஷ்ணாம்பேட்டையை சேர்ந்த தமிழ் பேரரசு (33), வின்டர்பேட்டையை சேர்ந்த தமிழ்மணி (29) மற்றும் சத்யராஜ் (36) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள்  கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்