புதிய வழித்தடங்களில் அரசு பஸ்கள்
காரைக்குடி அருகே புதிய வழித்தடங்களில் அரசு பஸ் போக்குவரத்தை மாங்குடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
காரைக்குடி,ஆக.
காரைக்குடி அருகே புதிய வழித்தடங்களில் அரசு பஸ் போக்குவரத்தை மாங்குடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
புதிய வழித்தடங்கள்
காரைக்குடி அருகே உள்ள புதுவயல் பஸ் நிலையத்தில் இருந்து காரைக்குடி, கல்லூர், ராயபுரம், நம்பூரணிப்பட்டி, வம்பரம்பட்டி, ஏத்தநாடு, பெருந்தாக்குடி, சிவாலங்குடி, போசம்பட்டி, சமுத்திராப்பட்டி விலக்கு பாம்பாரப்பட்டி விலக்கு, அம்புராணி விலக்கு, கே.புதுப்பட்டி, அறந்தாங்கி வரை புதிய வழித்தடங்களில் அரசு பஸ் போக்குவரத்து தொடங்கி வைக்கப்பட்டது.
மேலும் புதுவயலில் இருந்து சாத்தமங்கலத்திற்கு வெங்களூர் வழியாகவும், கொத்தமங்கலத்திலிருந்து தேவகோட்டைக்கு புதிய வழித்தடத்திலும் அரசு பஸ் போக்குவரத்து தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் ஏற்கனவே இயக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதுவயல்-சென்னை அரசு விரைவு பஸ் போக்குவரத்தும் மீண்டும் தொடங்கி வைக்கப்பட்டது.
எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
மேற்கண்ட வழித்தடங்களில் பஸ் போக்குவரத்தை தொடங்க போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் மாங்குடி எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்திருந்தார்.
அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் முன்னிலையில் மாங்குடி எம்.எல்.ஏ. புதிய வழித்தடங்களில் பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுப சின்னத்துரை, புதுவயல் நகர செயலாளர் பக்ருதீன் அலி, மாவட்ட காங்கிரஸ் செயலாளர் அப்பாவு ராமசாமி, காங்கிரஸ் வட்டார தலைவர்கள் கருப்பையா, செல்வம், மாவட்ட கவுன்சிலர் ராதா பாலசுப்பிரமணியன், ஒன்றிய கவுன்சிலர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.