காவல்துறை சார்பில் ஒரே நாளில் 251 மனுக்களுக்கு தீர்வு
காவல்துறை சார்பில் ஒரே நாளில் 251 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
சிவகங்கை,ஆக.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் அறிவுறுத்தலின்படி இம்மாவட்டத்தில் உள்ள 43 போலீஸ் நிலையங்களிலும் நிலுவையில் இருந்த மனுக்களை உடனுக்குடன் விசாரித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் நேற்று ‘பெட்டிஷன் மேளா’ நடைபெற்றது. சிவகங்கை தாலுகா போலீஸ் நிலையம், காளையார்கோவில் போலீஸ் நிலையம் ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரடியாக சென்று மனு விசாரணை நடைபெறுவதை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், “இம்மாவட்டத்தில் நடைபெற்ற போலீஸ் குறை தீர்க்கும் நாள் நிகழ்ச்சிகளில் நேற்று ஒரே நாளில் 251 மனுக்கள் விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.” என்றார்.