பவித்திரமாணிக்கம் துணை மின்நிலையத்தில் மின் மாற்றி வெடித்து தீப்பிடித்தது

திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கத்தில் உள்ள துணை மின்நிலையத்தில் மின் மாற்றி வெடித்து தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Update: 2021-08-05 17:51 GMT
திருவாரூர்:
திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கத்தில் உள்ள துணை மின்நிலையத்தில் மின் மாற்றி வெடித்து தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை  அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மின்மாற்றி ெவடித்தது 
திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கத்தில் 230 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இந்த துணை மின் நிலையத்தில் இருந்து திருவாரூர், நாகை, காரைக்கால், உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை துணை மின் நிலையத்தில் உள்ள மின்சார அளவை சமன் செய்யும் மின்மாற்றி ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். 
பெரும் விபத்து தவிர்ப்பு
தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து 20 கிலோ உலர் மாவு தீயணைப்பு கருவிகள் மூலம் தீயை அணைத்தனர். 
உடனடியாக மின் ஊழியர்கள், தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைத்ததால்   பெரும் விபத்து தடுக்கப்பட்டது. இந்த மின் விபத்தினால் முற்றிலும் மின் வினியோகம் தடைசெய்யப்பட்டது. பின்னர் மின் ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு மின்மாற்றியில் உள்ள பழுதினை சீரமைத்தனர். இதையடுத்து மின் வினியோகம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்