புதிய மின்மாற்றி அமைப்பு

நயினார்கோவிலில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது.

Update: 2021-08-05 17:49 GMT
நயினார்கோவில், 
நயினார்கோவில் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக மின்தடை ஏற்படாமல் சீரான மின்வினியோகம் கிடைக்க புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. இதனை ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர்பாட்சா முத்துராமலிங்கம் தொடங்கி வைத்தார். பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் முன்னிலை வகித்தார். அப்போது மின்வாரியமேற்பார்வை பொறியாளர் மங்களநாதன், செயற்பொறியாளர் வேல்முருகன், நயினார்கோவில் ஊராட்சி தலைவர் ஜோதிமணி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சக்தி, அண்ணாமலை, சந்திரசேகர், நாதன் குரூப்ஸ் உரிமையாளர்கள் கணேசன், கண்ணதாசன், கவுன்சிலர்கள் நயினார்கோவில் மணிமன்னன், வல்லம்நாகநாதன், முன்னாள் ஊராட்சி தலைவர்முருகேசன், பொறுப்புகுழு உறுப்பினர்கள் அரசமணி, புலிகேசவன், கோவிந்தன், வளவன், வாணியவல்லம் வாசு, கோபால் மற்றும் நயினார்கோவில் மின் பிரிவு அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்