குடியாத்தத்தில் உரிய ஆவணங்கள் இன்றி இயங்கிய தனியார் பஸ் பறிமுதல்

உரிய ஆவணங்கள் இன்றி இயங்கிய தனியார் பஸ் பறிமுதல்

Update: 2021-08-05 17:23 GMT
குடியாத்தம்

குடியாத்தத்தில் இருந்து பரதராமி வழியாக ஆந்திர மாநிலம் சித்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தனியார் பஸ் சென்று வருகிறது. அந்த தனியார் பஸ் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயங்குவதாக போக்குவரத்து துறை வேலூர் உதவி ஆணையர் சுரேஷ், வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் ஆகியோருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த தனியார் பஸ்சை ஆய்வு செய்ய குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேஷ்கண்ணாவுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதனையடுத்து நேற்று மாலையில் குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா குடியாத்தம் அடுத்த அனுப்புபகுதியில் அந்த தனியார் பஸ்சை நிறுத்தி ஆய்வு மேற்கொண்டார். அதில் தனியார் பஸ்சின் தகுதிச் சான்று, காப்பீடு, உரிமம், நடத்துனர் உரிமம் உள்ளிட்ட சான்றிதழ்களை தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் சமர்ப்பிக்கவில்லை. இதனையடுத்து அந்த பஸ்சை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
 
அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் மற்றொரு பஸ்சில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட தனியார் பஸ் குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்