கோவிலில் திருடிய வாலிபர் கைது

கோவிலில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-08-05 17:14 GMT
சின்னசேலம், 

சின்னசேலம் அருகே தென்செட்டியந்தல் கிராமத்தில் சடையப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூட்டை உடைத்து வாலிபர் ஒருவர் உள்ளே புகுந்தார். பின்னர் அவர் அங்கிருந்த பூஜை பொருட்களான பித்தளை குடம், தாம்பளத்தட்டு உள்ளிட்டவற்றை திருடினார். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை பிடித்து சின்னசேலம் போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து  பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் பைத்தந்துறை கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் (வயது 29) என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்