தெருக்கூத்து நடத்திய 19 பேர் மீது வழக்கு

கோவில் திருவிழாவில் தெருக்கூத்து நடத்திய 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2021-08-05 17:12 GMT
விழுப்புரம், 

மரக்காணம் அருகே கந்தாடு கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவின்போது நேற்று முன்தினம் இரவு தெருக்கூத்து நடத்தியுள்ளனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறி தெருக்கூத்து நடத்தியதாக அதே கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம், தங்கப்பன், கருணாநிதி, ஸ்ரீதர், ராமதாஸ், அண்ணாமலை, மோகன் உள்பட 19 பேர் மீது மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்