கொரோனா தடுப்பூசி முகாம்
பெரியகுளம் அருகே கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.;
பெரியகுளம்:
பெரியகுளம் அருகேயுள்ள கீழவடகரை ஊராட்சி, அழகர்சாமிபுரத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி செல்வராஜ் தலைமை தாங்கினார்.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராணி முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் பவானந்தன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.
முகாமில் ஊராட்சி துணைத் தலைவர் ராஜசேகர், சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ், ஆனந்தன் ஊராட்சி செயலாளர் ஜெயபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் ஊராட்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.