கும்மிடிப்பூண்டி அருகே கியாஸ் சிலிண்டர் தொழிற்சாலையில் தீ தடுப்பு ஒத்திகை

கும்மிடிப்பூண்டி அருகே கியாஸ் சிலிண்டர் தொழிற்சாலையில் தீ தடுப்பு ஒத்திகை.

Update: 2021-08-05 17:05 GMT
கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை அருகே உள்ள சிறுபுழல்பேட்டை கிராமத்தில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்துக்கு சொந்தமான சிலிண்டர்களில் சமையல் எரிவாயு நிரப்பும் தொழிற்சாலை உள்ளது.

இங்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அவசரகால தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் எம்.வி.கார்த்திகேயன் தலைமையில் நேற்று நடைபெற்றது. மண்டல மேலாளர் எம்.வி.எஸ்.நாயுடு, கிடங்கு நிர்வாக அதிகாரி உதயகுமார், பாதுகாப்பு அதிகாரி சோனு பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியின்போது, 150 டன் கொள்ளளவு கொண்ட எரிவாயு சேமிப்பு கலனில் உள்ள வால்வில் இருந்து எதிர்பாராதவிதமாக கியாஸ் கசிவு ஏற்பட்டது போல சூழல் உருவாக்கப்பட்டது.

அத்தகைய அவசர கால சூழ்நிலையில் தொழிற்சாலை நிர்வாகிகள் மற்றும் அதனைச்சார்ந்த பிற துறையினர் எப்படி வேகமாகவும், துல்லியமாகவும் செயல்பட்டு நிலைமையை சகஜ நிலைக்கு கொண்டு வருகின்றனர் என்பதனை ஒத்திகை செய்து காண்பித்தனர்.

மேலும் செய்திகள்