இளம்பெண்ணை ஏமாற்றி 28 பவுன் நகைகளை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தன

இளம்பெண்ணை ஏமாற்றி 28 பவுன் நகைகளை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தன;

Update: 2021-08-05 16:59 GMT
காங்கேயம்
இளம்பெண்ணை ஏமாற்றி 28 பவுன் நகைகளை பறித்த  வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது:-
28 பவுன் நகைகள் பறிப்பு
திருப்பூரில் காங்கேயம் அருகே நத்தக்காடையூர் பகுதியை சேர்ந்த 25 வயது திருமணமான இளம்பெண். இவர் கோவையில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அதே பகுதியில் பக்கத்து வீட்டில் கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டையை சேர்ந்த அஸ்வின் என்ற அன்வர் உசேன் (வயது 30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோவை பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சர்வராக வேலை செய்து வந்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக அன்வர் உசேன் அந்த இளம்பெண்ணிடம் பேச்சு கொடுத்து, ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அவரிடம் இருந்து 28 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு தலைமறைவாகி கார், மோட்டார்சைக்கிள் உள்ளிட்டவைகளை வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரிய வந்தது.
வாலிபர் கைது
இது குறித்து புகாரின் பேரில் காங்கேயம் தனிப்படை போலீசார் கோவை மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தலைமறைவாக இருந்த அஷ்வின் என்ற அன்வர் உசேனை கைது செய்தனர்.
 அவரிடம் இருந்து நகை, கார், மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை மீட்டனர். பின்னர் அவரை காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தாராபுரம் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்