மசாஜ் சென்டரில் விபசாரம் 2 வாலிபர்கள் கைது

மசாஜ் சென்டரில் விபசாரம்2 வாலிபர்கள் கைது

Update: 2021-08-05 16:41 GMT
திருப்பூர், 
திருப்பூர் தாராபுரம் ரோடு கரட்டாங்காடு பகுதியில் மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாக தெற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் நேற்று அந்த மசாஜ் சென்டருக்கு சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு திருநெல்வேலியை சேர்ந்த 27 வயது பெண் இருந்தார். மசாஜ் சென்டர் என்ற பெயரில் ஆண்களை வரவழைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக மசாஜ் சென்டர் பொறுப்பாளரான கரட்டாங்காட்டை சேர்ந்த கிஷோர் (வயது 20), வரவேற்பாளரான ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த பிரதீப் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அனுமதியில்லாமல் மசாஜ் சென்டர் நடத்தியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்