மூலனூர் அருகே இளம் பெண்ணை கத்தியால் குத்தி கொடூரமாக கொன்ற கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
மூலனூர் அருகே இளம் பெண்ணை கத்தியால் குத்தி கொடூரமாக கொன்ற கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
மூலனூர்
மூலனூர் அருகே இளம் பெண்ணை கத்தியால் குத்தி கொடூரமாக கொன்ற கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
இந்த கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கள்ளக்காதல்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் திருநீலகண்டபுரத்தை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. சிலை வடிக்கும் சிற்பி. இவருடைய மனைவி கிருத்திகா (வயது 27). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சிலை செதுக்க பொன்னுச்சாமி அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார். இதனால் கிருத்திகாவுக்கும், மூலனூர் ஆசிரியர் காலனியை சேர்ந்த உறவினர் சிற்பி கந்தசாமி (37) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது.
கந்தசாமிக்கு ஏற்கனவே திருமணமாகி 8 வயதில் ஒரு மகன் உள்ளான். ஆனால் கந்தசாமிக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கந்தசாமியின் மனைவி, கந்தசாமியை விட்டு, பிரிந்து மகனுடன் தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.
குத்திக்கொலை
இதனால் தனியாக வசித்து வந்த கந்தசாமி, தனது கள்ளக்காதலி கிருத்திகாவுடன் நெருக்கத்தை அதிகமாக்க முடிவு செய்தார். இதற்காக திருநீலகண்டபுரத்தில் கிருத்திகாவின் வீடு அருகிலேயே ஒரு வாடகைக்கு வீடு பிடித்து அதில் குடியிருந்து வந்தார். இதனால் கந்தசாமி வீட்டிற்கு கிருத்திகா வருவதற்கும், கிருத்திகா வீட்டிற்கு கந்தசாமி செல்வதற்கும் வசதியாகி போனது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்தனர். இதனால் இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் கிருத்திகாவின் கணவர் பொன்னுச்சாமிக்கு தெரியவந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். ஆனாலும் அவர்கள் இடையேயான கள்ளத்தொடர்பு தொடர்ந்தது. உல்லாசத்தையும் விடவில்லை. கந்தசாமியும், கிருத்திகாவும் கணவன்-மனைவி போல் சண்டையிட்டு கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி காலையில் கந்தசாமி வீட்டிற்கு கிருத்திகா வந்துள்ளார். அப்போது கந்தசாமிக்கும், கிருத்திகாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த கந்தசாமி, தான் மறைத்துவைத்திருந்த கத்தியால், கிருத்திகாவை குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் சம்பவ இடத்திலேயே கிருத்திகா துடிதுடித்து இறந்தார்.
கள்ளக்காதலன் கைது
இந்த கொலை குறித்து மூலனூர் போலீசார்வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலன் கந்தசாமியை தேடி வந்தனர். மேலும் அவரை பிடிக்க தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு, இன்ஸ்பெக்டர் அன்பு செல்வி (பொறுப்பு), சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கந்தசாமியை தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த கந்தசாமியை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.