வெளிநாட்டு சொகுசு காருக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரியை எதிர்த்து நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு
நடிகர் விஜயை போல வெளிநாட்டு சொகுசு காருக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரியை எதிர்த்து நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை இன்று (வியாழக்கிழமை) பிறப்பிப்பதாக சென்னை ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.
சென்னை,
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த சொகுசு காருக்கு தமிழக அரசு விதித்த நுழைவு வரியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், வழக்கை தள்ளுபடி செய்ததுடன், நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார். கடும் கண்டன கருத்துகளையும் விஜய்க்கு எதிராக தெரிவித்து இருந்தார்.
அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் விஜய் மேல்முறையீடு செய்து, அபராதம் விதித்ததற்கு இடைக்கால தடை பெற்றார். நடிகர் விஜயை போல, கடந்த 2015-ம் ஆண்டு நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்துவருகிறது.
ஆஜராகவில்லை
அதாவது, கடந்த 2015-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து நடிகர் தனுஷ் இறக்குமதி செய்த சொகுசு காருக்கு ரூ.60.66 லட்சம் நுழைவு வரி விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தனுஷ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 50 சதவீத வரியை செலுத்தி சொகுசு காரை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று 2016-ம் ஆண்டு உத்தரவிட்டார். அதன்படி அந்த காரை தனுஷ் பதிவுசெய்து கொண்டார்.
இந்தநிலையில், பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்துவந்த நடிகர் தனுஷின் வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. அதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை இன்று (வியாழக்கிழமை) வழங்குவதாக நீதிபதி அறிவித்தார்.