தமிழகத்தில் 110 குழந்தைகள் உள்பட 1,949 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் 110 குழந்தைகள் உள்பட 1,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-08-05 14:09 GMT
சென்னை,

தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 55 ஆயிரத்து 965 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,096 ஆண்கள், 853 பெண்கள் என மொத்தம் 1,949 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கோவையில் 226 பேரும், ஈரோட்டில் 189 பேரும், சென்னையில் 114 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறைந்த பட்சமாக பெரம்பலூரில் 8 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதில் 12 வயதுக்கு உட்பட்ட 110 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 293 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

38 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இதுவரை 3 கோடியே 71 லட்சத்து 76 ஆயிரத்து 303 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 14 லட்சத்து 99 ஆயிரத்து 777 ஆண்களும், 10 லட்சத்து 67 ஆயிரத்து 586 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேர் உள்பட 25 லட்சத்து 67 ஆயிரத்து 401 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 94 ஆயிரத்து 148 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சத்து 69 ஆயிரத்து 929 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு ஆஸ்பத்திரியில் 26 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 12 பேரும் என 38 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். அதில் அதிகபட்சமாக திருவள்ளூரில் 5 பேரும், திருவாரூர், கோவையில் தலா 3 பேரும், தஞ்சாவூர், தென்காசி, சேலம், நாமக்கல், நாகப்பட்டினம், ஈரோடு, கடலூர், செங்கல்பட்டில் தலா 2 பேரும் உள்பட என 22 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 34 ஆயிரத்து 197 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

2,011 பேர் ‘டிஸ்சார்ஜ்’

தமிழகத்தில் நேற்று 39 ஆயிரத்து 272 ஆக்சிஜன் படுக்கைகள், 24 ஆயிரத்து 327 ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகள், 7 ஆயிரத்து 503 ஐ.சி.யு. படுக்கைகள் என மொத்தம் 71 ஆயிரத்து 102 படுக்கைகள் ஆஸ்பத்திரிகளில் காலியாக உள்ளன. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 2,011 பேர் நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக கோவையில் 184 பேரும், தஞ்சாவூரில் 118 பேரும், திருப்பூரில் 106 பேரும், சென்னையில் 142 பேரும், சேலத்தில் 131 பேரும் அடங்குவர். இதுவரையில் 25 லட்சத்து 13 ஆயிரத்து 87 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 20 ஆயிரத்து 117 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்