சாலையோரத்தில் குப்பைகளை கொட்டுவதால் சுகாதாரக்கேடு
பழனி அருகே சாலையோரத்தில் குப்பைகளை கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.;
பழனி:
பழனி அருகே உள்ள பொன்னாபுரத்தில், 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு செல்வதற்கு ஆயக்குடியில் இருந்து சாலை உள்ளது.
கடந்த சில நாட்களாக பொன்னாபுரம் செல்லும் சாலையோரத்தில், ஆயக்குடி பேரூராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் கொட்டி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. ஓடையில் குப்பைகள் விழுவதால் தண்ணீர் மாசடைந்து வருகிறது.
எனவே பொன்னாபுரம் சாலையோரத்தில், குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.