சென்னையில் முன்னாள் மாவட்ட பதிவாளர் வீட்டில் அதிரடி சோதனை லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை

சென்னையில் முன்னாள் மாவட்ட பதிவாளர் வீட்டில் அதிரடி சோதனை லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை.

Update: 2021-08-05 09:59 GMT
சென்னை,

சென்னையில் மாவட்ட பதிவாளராக பணியாற்றி வந்த ஆர்.எஸ்.ராஜன் என்பவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்தனர். இதனால் ஓய்வு பெறும் நிலையில் இவர் மீது பணி இடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை திருமங்கலத்தில் உள்ள இவரது வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் வழக்கிற்கு தேவையான முக்கியமான ஆவணங்கள் சிக்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்