பொன்னேரி பேரூராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

பொன்னேரி பேரூராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு முகாம் அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்.

Update: 2021-08-05 04:59 GMT
பொன்னேரி, 

பொன்னேரி பேரூராட்சி பஸ் நிறுத்தத்தில் பொது சுகாதாரத்துறை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் சார்பில் அமைக்கப்பட்ட சிறப்பு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாமிற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பிஜான்வர்கீஸ் தலைமை தாங்கினார்.

பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர் அனைவரையும் வரவேற்றார். கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டிஜே.கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார்.

இந்த முகாமை தொடங்கி வைத்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், விழிப்புணர்வு பிரசார ஆட்டோக்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். வாகனங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு ஸ்டிக்கர்களையும் ஒட்டினார். இந்த முகாமில் முககவசங்கள் அணிவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது தொடர்பான துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த முகாமில் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உமாமகேஸ்வரி, காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் சதாசிவலிங்கம், மீஞ்சூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் ரமேஷ்ராஜ், சுகுமாரன், வருவாய்த்துறை அலுவலர்கள், பொதுசுகாதாரத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் நடைபெற்ற முகாமில், அமைச்சர் நாசர் கலந்து கொண்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு தொடர்பாக துண்டு பிரசுரங்களையும், நோய் எதிர்ப்பு மாத்திரைகளையும் வழங்கினார். இதில், தாசில்தார் மகேஷ், மருத்துவ அதிகாரி டாக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்