கோட்டை ஈஸ்வரன் கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்தால் நடவடிக்கை மண்டபம் வீதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது
கோட்டை ஈஸ்வரன் கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மண்டபம் வீதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.
கோட்டை ஈஸ்வரன் கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மண்டபம் வீதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.
கோட்டை ஈஸ்வரன் கோவில்
ஈரோடு கோட்டை பகுதியில் ஆருத்ர கபாலீஸ்வரர் (கோட்டை ஈஸ்வரன்) கோவில் உள்ளது. இந்த கோவிலின் வகையறா கோவில்கள் ஈரோட்டில் அமைந்து உள்ளன. இந்த கோவில்களுக்கு சொந்தமான சொத்துகள் பல்வேறு இடங்களில் இருக்கிறது. இந்தநிலையில் கோவிலின் சொத்துகளை ஆக்கிரமிப்பு செய்யவோ, விற்கவோ தடை விதித்து இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இதுதொடர்பாக ஈரோடு மண்டபம் வீதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் இந்து சமய அறநிலையத்துறை மூலம் பொது அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
குற்ற நடவடிக்கை
ஈரோடு மாவட்டம் ஈரோடு தாலுகா ஈரோடு நகர் வார்டு டி, பிளாக் 20 டி.எஸ். எண் 55 கதவு எண்.185-ன் பரப்பளவு 0.250 சதுர மீட்டர். இந்த இடம் அருள்மிகு ஆருத்ர கபாலீஸ்வரர் வகையறா திருக்கோவிலுக்கு சொந்தமானதாகும். இந்த இடத்தினை வாங்கவோ, விற்கவோ அல்லது ஆக்கிரமிப்பதோ இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 1959-ன் படி சட்ட விரோதமானது. மேற்படி செயல்களில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிவிப்பு பதாகையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு அமைந்த பின்னர் கோவில் சொத்துகள் மீட்கும் பணிகள் தீவிரம் அடைந்து உள்ளன. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஈரோடு வந்து கோட்டை ஈஸ்வரன் கோவிலில் ஆய்வு மேற்கொண்டு சென்றார். இந்தநிலையில் கோவில் சொத்து ஆக்கிரமிப்பு தொடர்பான அறிவிப்பு வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.