உடுப்பியில் 16-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு

16-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

Update: 2021-08-04 21:41 GMT
மங்களூரு: உடுப்பி மாவட்டம் எள்ளூரில் பிரசித்தி பெற்ற மகாதோபரா விஸ்வேசுரா கோவில் உள்ளது. இக்கோவிலில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கோவிலில் பழங்கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து கல்வெட்டை சுத்தம் செய்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர்.

 அப்போது அந்த கல்வெட்டு 16-ம் நூற்றாண்டை சேர்ந்தது என்பது தெரியவந்தது. அதாவது விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவராயர் ஆட்சி காலத்தில் செதுக்கப்பட்ட கல்வெட்டு என்று தெரிந்தது. இந்த கல்வெட்டு 2 அடி உயரம், 2 அடி அகலம் கொண்டது. இந்த கல்வெட்டின் மேல் பகுதியில் சூரியன், சந்திரன், நந்தி, தீபம், சிவலிங்கம், வாள், பூக்கள் ஆகியவை செதுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அந்த பழங்கால கல்வெட்டை தொல்பொருள் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்