உரக்கடையில் ரூ.50 ஆயிரம் திருட்டு
உரக்கடையில் ரூ.50 ஆயிரம் திருட்டு போயின;
குன்னம்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள நன்னை கிராமத்தை சேர்ந்தவர் கூத்தப்பன் (வயது 48). இவர் நன்னை கிராமத்தில் உரக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு வங்கியில் செலுத்துவதற்காக ரூ.50 ஆயிரம் பணத்தை கடையில் வைத்து விட்டு வீட்டுக்கு சென்றார். இதை அறிந்த யாரோ மர்ம நபர்கள் கடையின் பூட்டை இரும்பு கம்பியால் உடைத்து கல்லாவில் வைக்கப்பட்டு இருந்த ரூ.50 ஆயிரத்தை திருடிச் சென்றனர். இதுகுறித்து கூத்தப்பன் கொடுத்த புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.